2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

'கையொப்பமிட்டதனால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து வெளியேறினேன்'

Gavitha   / 2015 பெப்ரவரி 28 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஹாபீஸ் நசீர் அகமட்டை முதலமைச்சராக்குவதற்காக கையொப்பமிட்டதனால், நான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து வெளியேற வேண்ய துப்பாக்கிய நிலை ஏற்பட்டது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹபீஸ் நசிர் அகமட் மற்றும் கிழக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினர் அலி சாஹீர் மௌலானா ஆகியோருக்கு வெள்ளிக்கிழமை (27) ஏறாவூரில் அளிக்கப்பட்ட வரவேற்பு வைபவத்தில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர்,

கிழக்கு மாகாண முதலமைச்சு என்பது தமிழ் முஸ்லிம்களுக்கு சொந்தமானது. இந்த முறை முஸ்லிம்களுக்குரியதாகும். முதலமைச்சரை தெரிவு செய்யும் படலம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை தெரிவு செய்வதற்காக தற்போதைய கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட்டுக்கு நானும் சத்தியக்கடதாசியின் மூலம் ஆதரவு தெரிவித்தேன்.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் முதலமைச்சரை உருவாக்கும் படலத்துக்கு நான் வகித்த அகில இலங்கை மக்கள் காங்ஸிரசின் தலைவரிடம் கேட்காமலேயே நான் 19ஆவது நபராக அதற்கான சத்தியக் கடதாசியை வழங்கினேன்.

ஹாபீஸ் நசீர் அகமட்டுக்கு ஆதரவாக நான் கையொப்பமிடும் போது,  நான் முஸ்லிம் காங்ஸிரசின் உறுப்பினருமல்ல முஸ்லிம் காங்கிரஸிரல் இணைய வேண்டும் என்ற எண்ணமும் இருக்கவில்லை.

அடுத்த இரண்டரை வருடகாலம் முதலமைச்சரை பெற்றுக்கொள்வதற்கு தகுதியில்லாத ஒரு சமூகமாக முஸ்லிம் சமூகம் மாறிவிடுமோ என்ற கவலை என்னிடத்தில் இருந்தது. அதனால் தான் எனது தலைமைத்துவத்திடம் கூட நான் கேட்கமால் ஹாபீஸ் நசீர் அகமட்  முதலமைச்சருக்கான கையொப்பத்தினை வைத்தேன்.

நான் ஹாபீஸ் நசீர் அகமட்டை முதலமைச்சராக்குவதற்காக கையொப்பமிட்டதனால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து வெளியேற வேண்டிய துப்பாக்கிய நிலை ஏற்பட்டது.

முஸ்லிம் சமூகம் என்பது நான்காக பிளவுபட்டு, எங்களை நாங்கள் தாரை வார்த்துக் கொடுப்பதை விடுத்து, முஸ்லிம்கள் எல்லோரும் ஒரே அணியில் ஒற்றுமைப்பட வேண்டிய தேவைப்பாடு என்கின்ற நியாயத்தை நான் உணர்ந்து கொண்டதாலேயே, ஹாபீஸ் நசீர் அகமட்  முதலமைச்சராவதற்காக நான் கையொப்பமிடவேண்டி ஏற்பட்டது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பது மறைந்த தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப் உருவாக்கிய மாபெரும் விருட்சமாகும்.

அந்த விருட்சம் இந்த முஸ்லிம் சமூகத்துக்காக ஆற்றிய பணிகள் இன்று மறக்கடிக்கப்பட்டிருக்கலாம் அல்லது மறைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செய்த சாதனைகளை நான் மீட்டிப்பார்க்கின்றேன்.
முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்த வரைக்கும் பலமான அரசியல் சக்தியொன்று தேவையாகும்.

நாங்கள் இன்னும் பிளவுபட்டுக் கொண்டு ஆளுக்கொரு அணியாக செல்லுவோமாக இருந்தால், நிச்சயமாக எங்களது உரிமைகளை நாங்கள் வென்றெடுக்கின்ற அந்த விடயத்தில் பின் வாங்கிச் செல்கின்ற ஒரு சமூகமாக மாற வேண்டிவரும்.
மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்த வரைக்கும் நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை பிரதிநிதித்துவங்களை பெறுவதாக இருந்தால் எதிர்வரும் காலங்களில் மிகவும் இலகுவாக பெறமுடியாது.

அன்று மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தின் பங்கீட்டில் செய்யப்பட்ட துரோகம் இந்த மாவட்டத்தில் காத்தான்குடி ஏறாவூர், கல்குடா என்று கூறு போட்டு வைத்துள்ளது. இவற்றினை நாங்கள் தொடர்ந்தும் செய்ய முடியாது. எங்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்த முடியாது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காத்தான்குடி மற்றும் ஏறாவூர் கல்குடா ஆகிய சமூகங்கள் ஒரே குடையில் கீழ் ஒன்றுபட வேண்டிய காலம் நெருங்கி விட்டது.

அப்படி ஒன்றுபடுவதென்பது வெறுமனே தங்களுடைய சுகபோகங்களுக்காகவும் தங்களுடைய அமைச்சுப் பதவிகளுக்காகவும் இந்த சமூகத்தின் உரிமையை வென்றெடுக்க வேண்டும். முஸ்லிம் சமூகம் தலை நிமிர்ந்து வாழவேண்டும் என்ற வகையில் நாம் அனைவரும் ஒன்று பட வேண்டும்; என்று தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X