Sudharshini / 2015 பெப்ரவரி 28 , மு.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்,எம்.எஸ்.எம். ஹனீபா
திவிநெகும அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களின் இடமாற்றம் தொடர்பில் மேற்கொள்ளப்படவிருந்த நடவடிக்கைகள் யாவும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் வெள்ளிக்கிழமை (27) ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அகில இலங்கை திவிநெகும அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உத்தியோகஸ்தர் சங்கத்தின் பிரதான செயளாலர் ஜகத் குமார தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக திவிநெகும அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் எதிர்க்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதிக்கும் திவிநெகும அபிவிருத்தி உத்தியேகஸ்தர் சங்கத்துக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.
மேலும், உத்தியோகத்தர்களுக்கான பணிக்கொடைகளை உடன் வழங்குதல் அவர்களுக்கான மோட்டார் சைக்கிள்கள் பெற்றுக்கொடுத்தல் மற்றும் சமுர்த்தி உத்தியோகஸ்தர்களின் பதவி உயர்வு தொடர்பில் உரிய அமைச்சுக்களுடன் கலந்துரையாடி முடிவுகள் எடுக்கப்பட்டதாக அம்பாறை மாவட்ட சமுர்த்தி உத்தியோகஸ்தர் தலைவர் ஐ.எஸ்.வகாப் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .