Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 மார்ச் 02 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள ஹோட்டல் ஒன்றிலிருந்து மனித நுகர்வுக்கு ஒவ்வாத ஒருதொகுதி உணவுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிரேஷ்ட மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எச்.எம்.பளீல் தெரிவித்தார்.
பிரதேசத்துக்கு பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எஸ்.சந்திரசிறி தலைமையிலான குழுவினர் திங்கட்கிழமை (2) மேற்கொண்ட திடீர் சோதனையின்போது, மனித நுகர்வுக்கு ஒவ்வாத மீன்கள், கத்தரிக்காய்கள்;, கரட், பராட்டா ரொட்டி, வீசு;சு ரொட்டி, பழங்கறிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த ஹோட்டல் உரிமையாளருக்கு எதிராக மனித நுகர்வுக்கு உதவாத உணவு தயாரித்தமை, அவற்றை சேமித்துவைத்தமை, விற்பனை செய்தமை ஆகிய குற்றங்களுக்காக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஏற்கெனவே இவ்வாறான உணவுகள் இந்தக் ஹோட்டலில் கண்டுபிடிக்கப்பட்டு, ஹோட்டல் உரிமையாளர் பல தடவைகள் எச்சரிக்கப்பட்டதாகவும் ஆனால், அந்த எச்சரிக்கை மீறப்பட்டதால் தாங்கள் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்ததாகவும் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
தங்களது வீடுகளில் சுத்தமான முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகளை உட்கொள்ளுமாறு மக்களுக்கு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago