2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

மக்கள் சந்திப்பு

Suganthini Ratnam   / 2015 மார்ச் 02 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல்  

மட்டக்களப்பு மாவட்டத்தின்; ஏறாவூரில் அமைந்துள்ள கிழக்கு மாகாண முதலமைச்சரின் பிராந்திய அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு  ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்றது.

இதன்போது முதலமைச்சரை சந்தித்த பொதுமக்கள், அன்றாடம் எதிர்நோக்குகின்ற வாழ்வாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்டவை தொடர்பில் தெரியப்படுத்தினர்.  

மக்கள் முன்வைத்த பிரச்சினைகளை கவனத்தில் எடுத்த முதலமைச்சர், கிழக்கு மாகாண தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்த்து எதிர்கால வாழ்வை வளம் பெறச் செய்வதே தனது நோக்கமும் சேவையுமாக அமையும்  என்றும்  எவருக்கும் பாரபட்சமின்றி சமமாக சகல சேவைகளும் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் கூறியதாக முதலமைச்சரின் ஊடக இணைப்பானர் ஏ.எம்.மௌசூம் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X