2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சம்பள நிலுவை, மின்கட்டணம் செலுத்துவதற்கான பத்திரம் சமர்ப்பிப்பு

Suganthini Ratnam   / 2015 மார்ச் 03 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

வாழைச்சேனை கடதாசி ஆலையில் கடமையாற்றும் ஊழியர்களின் சம்பள நிலுவை மற்றும் ஆலையில் மின்கட்டணம் செலுத்தப்படாமல் உள்ள மின்சாரக்கட்டண என்பவற்றை செலுத்துவதற்கு அதற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் ரிசாட்; பதியுதீன் அமைச்சரவையில் அதற்கான பத்திரத்தை  சமர்ப்பித்தற்காக அந்த மாவட்டத்தின் அரசியல் பிரதிநிதி என்ற வகையில் நான் நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக வீடமைப்பு சமுர்த்தி பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

வாழைச்சேனை கடதாசி ஆலை தொடர்பாக இன்று  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

'மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை பிரதேசத்தில் அமைந்திருக்கின்ற கடதாசி ஆலையில் மிக நீண்டகாலப் பிரச்சினையாக இருந்துவந்த ஊழியர்களது சம்பள நிலுவை மற்றும் மின் கட்டணம் செலுத்தப்படாமல் ஆலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு காணப்படுகின்ற நிலையில் இது தொடர்பாக அதற்குப் பொறுப்பான அமைச்சர் ரிசாட்; பதியுதீனின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து நிலுவை சம்பளத்தை வழங்குவதற்காகவும் மின்சார சபைக்கு செலுத்த வேண்டிய நிலுவையை செலுத்துவதற்காகவும் அமைச்சரவைப் பத்திரத்தை அவர் சமர்ப்பித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட ஊழியர்களது சம்பள நிலுவையை பெற்றுக்கொடுப்பதற்கும் இலங்கை மின்சார சபைக்கு செலுத்த வேண்டிய நிலுவை செலுத்துவதற்காகவும் அமைச்சர் ரிசாட்; பதியுதீன் எடுத்துக் கொண்ட முயற்சிக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசியல் பிரதிநிதி என்ற வகையில் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதுடன், எதிர்காலத்தில் நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர்களது வழிகாட்டலில் அமைச்சர் ரிசாட் பதியுதீனோடு  இணைந்து ஒரு முன்னேற்றகரமான கடதாசி ஆலையாக கொண்டு செல்வதற்குரிய திட்டங்களை வகுத்துக் கொண்டு இருக்கிறோம்' எனக் கூறினார்.  

வாழைச்சேனை கடதாசி ஆலையில் நிரந்தரமாக கடமையாற்றும் 142 ஊழியர்களுக்கு நான்கு மாத சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையாக 18 மில்லியன் ரூபாய் உள்ளதுடன்,  தற்காலிகமாக கடமையாற்றும் 62 ஊழியர்களுக்கு ஏழு மாத சம்பள நிலுவையாக 05 மில்லியன் ரூபாய் உள்ளது.  கடந்த 2011ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை இலங்கை மின்சார சபைக்கான மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாமல் மூன்று கோடியே 98 இலட்சம் ரூபாய் நிலுவையாக செலுத்த வேண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X