2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஆதரவற்ற பிள்ளைகளின் கல்விச்செலவுக்கான உதவிப்பணம்

Gavitha   / 2015 மார்ச் 03 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்,வா.கிருஸ்ணா

சிறுவர் இல்லங்களில் வாழும் ஆதரவற்ற பிள்ளைகளின் கல்விச் செலவை ஈடுசெய்வதற்காக உதவிப்பணம் வழங்கும் நிகழ்வு  திங்கட்கிழமை (02) தன்னாமுனை மியாமி மண்டபத்தில் நடைபெற்றது.

கல்லடி ஹரி, மயிலம்பாவெளி விலேஜ் ஒப் ஹோப் மற்றும் கருணாலயம், தன்னாமுனை மியாமி சிறுவர் இல்லங்களிலிருந்து தெரிவான 200 மாணவர்களுக்கு லைக்கா மொவைல் மற்றும் ஞானம் பவுண்டேசனின் ஆதரவில்; சேமிப்புக் கணக்குப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

ஞானம் பவுண்டேசன் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஜி. சங்கீதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், குறித்த சிறுவர் இல்லங்களின் காப்பாளர்களினால் ரூபாய் 1,000 வைப்பிலிட்டு திறக்கபட்டள்ள வங்கிக் கணக்குப் சேமிப்புப் புத்தகங்களும் வழங்கப்பட்டன.

குறித்த சிறுவர்களின் கல்வி கற்கும் காலம் வரையிலும் மாதாந்தம் தலா ரூபாய் 1,000 வீதம் மாணவர்களின் கணக்கில் இடப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஜி. சங்கீதன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X