2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஏறாவூர் நகரசபையின் புதிய உறுப்பினராக எம்.எஸ்.எம்.நசீர்

Suganthini Ratnam   / 2015 மார்ச் 03 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஏறாவூர் நகரசபையின் புதிய உறுப்பினராக தேசிய காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எம்.எஸ்.எம்.நசீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏறாவூர் நகரசபையின் தவிசாளர் அலிசாஹீர் மௌலானா கிழக்கு மாகாணசபை உறுப்பினராக நியமிக்கப்பட்டதை  அடுத்து, அவரின் வெற்றிடத்துக்கு  தான்  புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக எம்.எஸ்.எம்.நசீர்  தெரிவித்தார்.

மேற்படி எம்.எஸ்.எம்.நசீரை ஏறாவூர் நகரசபையின் புதிய உறுப்பினராக நியமிப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த,  தேர்தல் ஆணையாளருக்கு எழுத்து மூலம் திங்கட்கிழமை (2) அறிவித்துள்ளார்.

ஏறாவூர் நகரசபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் தேசிய காங்கிரஸின் சார்பில் எம்.எஸ்.எம்.நசீர் போட்டியிட்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X