2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

நிலப்பயன்பாட்டு வரைபடத்தை அறிமுகப்படுத்துவதற்கான செயலமர்வு

Suganthini Ratnam   / 2015 மார்ச் 03 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு மாவட்ட வாகரை விசேட முகாமைத்துவ பிரதேசத்தின் நிலப்பயன்பாட்டு வரைபடத்தை  அறிமுகப்படுத்துவதற்கான செயலமர்வு திங்கட்கிழமை (2)  வாகரை பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.ராகுலநாயகி தலைமையில் நடைபெற்றது.

மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் கீழ் இயங்கும் கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் ஏற்பாட்டில் இச்செயலமர்வு நடைபெற்றது.

வாவி முகாமைத்துவம், தாவர நடுகை, அனர்த்த முகாமைத்துவ செயற்பாடுகள், தோணாக்களை புனரமைத்தல், கடற்கரையோர மரநடுகை, மலசலகூடங்களை அமைத்தல், சேதனமுறை விவசாயச்செய்கை, வாழ்வாதார அபிவிருத்தித்திட்டங்கள் போன்றன நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.ராகுலநாயகி தெரிவித்தார்.

மேலும் நடப்பாண்டில்  (2015) வாகரை பிரதேசத்தின் வாவி முகாமைத்துவம், தாவர நடுகை, அனர்த்த முகாமைத்துவ செயற்பாடுகள், தோணாக்களை புனரமைத்தல், கடற்கரையோர மரநடுகை, மலசலகூடங்களை அமைத்தல், சேதனமுறை விவசாயச்  செய்கை, வாழ்வாதார அபிவிருத்தித்திட்டங்கள் என்பவற்றுக்காக 51 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் மாவட்ட திட்ட இணைப்பாளர் ஏ.கோகுலதீபன் தெரிவித்தார்.

இத்திட்டம் 2014ஆம் ஆண்டு சுமார் 2.5 மில்லியன் ரூபாய்  செலவில் ஆரம்பித்துவைக்கப்பட்டிருந்தது.

திக் சொலுசன்  நிறுவனத்தின் மூலம் அமுல்படுத்தப்படும் இந்த புவியியல்சார் தகவல் முறைமை திட்டத்தின் கீழ், ஒட்டுமொத்த வாகரை பிரதேசத்தின் புவியியல்சார் தகவல் விஞ்ஞான முறையில் திரட்டப்பட்டு இறுவெட்டுக்களில் வெளியிடப்பட்டுள்ளன.

நிகழ்வில் திக் சொலுசன் நிறுவனத்தின் விசேட செயற்றிட்ட நிபுணர் எஸ்.துஷ்யந்தன், அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர்களான கே.மாலக்க, கே.இசுரங்க மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர் திலீப் அஜந்த உட்பட பிரதேச செயலக அதிகாரிகள், திணைக்கள அலுவலர்களும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X