2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பில் மின்வெட்டு

Suganthini Ratnam   / 2015 மார்ச் 03 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின்; 30 இடங்களில் 4 தினங்களுக்கு  மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக  மாவட்ட மின் அத்தியட்சகர் பணிமனை தெரிவித்தது.

இலங்கை மின்சாரசபையின் திருத்தப்பணிகள் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் புதன்கிழமையிலிருந்து  (4) எதிர்வரும் 10ஆம் திகதிவரை 4 நாட்களுக்கு  30 இடங்களில் மின்வெட்டு  மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அப்பணிமனை தெரிவித்தது.

2015.03.04 அன்று  மகிழடித்தீவிலும்  2015.03.06 அன்று வாழைச்சேனை, கறுவாக்கேணி, முறக்கொட்டான்சேனை, சந்திவெளி, கோரகளிமடு, கிரான் மற்றும்  சித்தாண்டி பகுதிகளிலும் 2015.03.07 அன்று மணல்பிட்டி, பழுகாமம், முனைத்தீவு, அம்பிளாந்துறை, தாந்தாமலை, திக்கோடை, 40ஆம் கிராமம், முனைக்காடு, மகிழடித்தீவு, மண்டூர், பொறுகாமம், வெல்லாவெளி, பாலையடிவெட்டை, காக்காச்சிவெட்டை மற்றும் கோயில் போரதீவு பகுதிகளிலும்  015.03.10 அன்று வலையிறவு, வவுணதீவு, ஈச்சந்தீவு, நாவற்காடு, சிறுவாமுனை, விளாவெட்டுவான் மற்றும் கரவெட்டி ஆகிய பகுதிகளிலும் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X