2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

சிறுபோகச் செய்கைக்கான கூட்டம்

Suganthini Ratnam   / 2015 மார்ச் 04 , மு.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலகப் பிரிவின் கட்டுமுறிவு நீர்ப்பாசனத்திட்டங்கள், மதுரங்கேணி, கிரிமிச்சை சிறிய நீர்ப்பாசனத்திட்டங்களுக்கானஆரம்பக்கூட்டம் வாகரை பிரதேச செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆர்.துரைரெட்ணம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகியின் வரவேற்புரையை அடுத்து ஆரம்பமான இந்தக் கூட்டத்தில் மத்திய மாகாண, சிறு நீர்ப்பாசன, கமநல கேந்திர நிலைய அதிகாரிகளும் பெருந்தொகையான விவசாயிகளும் கலந்துகொண்டனர்.

இந்த வருடத்தின் சிறுபோகச் செய்கைக்கான வேலைகளை தொடங்குவதற்கான முடிவுகளை எடுக்கும் வகையிலான ஆரம்பக்கூட்டங்களின் இறுதிக் கூட்டமாக அமைந்த இந்தக் கூட்டத்தில், சிறுபோகத்துக்கான ஆரம்ப உழவு, முதல் நீர் விநியோகம், விதைப்பு, அறுவடை, கால்நடைகள் அகற்றல், மீளக் கொண்டுவருதல், உழவுக்கூலி, வாய்க்கால் துப்பரவுக்கூலி உர விநியோகம் உள்ளிட்ட  விடயங்கள் ஆராயப்பட்டன.

கடந்த மாதம் 26ஆம் திகதி போரதீவுபற்று - நவகிரி, தும்பங்கேணி, சிறிய நீர்ப்பாசனத்திட்டங்கள் மற்றும் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவுக்கான திட்டங்கள் ஆகியவற்றுக்கான கூட்டங்கள் நடைபெற்றன.
மண்முனை மேற்கு -வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவின் உன்னிச்சை, சிறு நீர்ப்பாசனத்திட்டங்கள்,  ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் உறுகாமம், கித்துள்வௌ, வெலிக்காகண்டி, சிறு நீர்ப்பாசனத்திட்டங்களுக்கான கூட்டம் 27ஆம் திகதியும்  28ஆம் திகதி கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகப்பிரிவின், வாகனேரி, புணானை, தரவை, வடமுனை, சிறிய நீரப்பாசனத்திட்டங்களுக்கான ஆரம்பக் கூட்டமும் நடைபெற்றிருந்தன.

அந்த வகையில் சிறுபோக நெற்செய்கைக்கான இறுதிக் கூட்டமாக  கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலகப் பிரிவின் கட்டு முறிவு சிறிய நீர்ப்பாசனத்திட்டங்கள், மதுரங்கேணி, கிரிமிச்சை சிறிய நீர்ப்பாசனத்திட்டங்களுக்காக ஆரம்பக் கூட்டம் வாகரை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X