2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் நிர்மாணப்பணி தொடர்பில் ஆராய்வு

Suganthini Ratnam   / 2015 மார்ச் 04 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆ பள்ளிவாசலின் இரண்டாம் கட்ட வேலைகளை ஆரம்பிப்பது தொடர்பாக பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் பொறியியலாளர்களுடனான  சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை அப்பள்ளிவாசலில் நடைபெற்றது.

இதில் முன்னாள்  பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும்  பொறியியலாளர்களான  ரீ.ரகுராமன், ஏ.எம்.தௌபீக், பள்ளிவாசலின் தலைவர் யு.எல்.ஏ.ஹக்கீம், பள்ளிவாசல் நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

கடந்த காலத்தில் மேற்படி பள்ளிவாசலின் கட்டட வேலைகள் தாமதமாகியமை, எதிர்கால வேலைகள் எவ்வாறு இடம்பெறவேண்டும் என்பது தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டன.  எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக முன்னாள் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இந்த பள்ளிவாசல் நிர்மாணத்துக்காக  முன்னாள்  மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட சுமார் நான்கு கோடியே  அறுபது இலட்சம் ரூபாய் தற்போது  கிடைத்துள்ள நிலையிலும், அதேவேளை, ஹிறா பௌண்டேஷனின் ஏற்பாட்டில் 87 மில்லியன் ரூபாய் சவூதி அரேபியா அரசினால் வழங்கப்பட்டதையும் வைத்து இந்த பள்ளிவாசல் நிர்மாணத்தை ஆறு மாதகாலத்துக்குள் நிறைவுசெய்யவேண்டும் என்றும் அவர் கூறினார்.

பள்ளிவாசல் கட்டட வேலைகள் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு வேலைகள் துரிதப்படுத்தப்படவேண்டும். காலம்  கடத்தாது வேலைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு பணிக்கப்பட்டுள்ளது.  பள்ளிவாசலுக்கு மேலும் வேண்டிய  பண உதவியை  எதிர்காலத்தில் ஹிறா பௌன்டேஷன் ஊடாக பெற்றுத்தருவதாகவும் அவர் கூறினார்.

எதிர்வரும் 09.03.2015  அன்று  வேலைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும்  அதற்கான ஏற்பாடுகளை இப்போதிருந்து  மேற்கொண்டு வருவதாகவும் எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதியில் முதலாம், இரண்டாம மாடிகளுக்கான வேலைகள் பூர்த்திசெய்து தரமுடியும் என்று  பொறியியலாளர் ரீ.ரகுராமன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X