Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 மார்ச் 04 , மு.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
–வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு, பட்டிருப்புத்தொகுதியில் உள்ள பிரதேச செயலாளர் பிரிவுகள் மற்றும் பிரதேச சபைகளின் எண்ணிக்கையை 5 ஆக அதிகரிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சனத்தொகை பரம்பலுக்கு ஏற்ப, இந்தத் தொகுதியிலுள்ள 3 பிரதேச செயலாளர் பிரிவுகளை 5 ஆகவும் 3 பிரதேச சபைகளை 5 பிரதேச சபைகளாகவும் அதிகரிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ள மகஜரிலேயே மேற்கண்டவாறு கோரப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மகாணசபை உறுப்பினர் ஞானமுத்து கிஷ்ணபிள்ளை (வெள்ளிமலை) தெரிவித்தார்.
கிழக்கு மாகாண ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் திருகோணமலையில் செவ்வாய்க்கிழமை (3) நடைபெற்றது. இதன்போதே மகஜரை தான் கையளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
'பட்டிருப்புத்தொகுதியிலுள்ள மிக முக்கிய தேவைகளை நிவர்த்திசெய்து தருமாறு கோரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. அவையாவன,
பட்டிருப்புத்தொகுதியின் சனத்தொகை பரம்பலுக்கு ஏற்ப, இந்தத் தொகுதியிலுள்ள 3 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் 5 பிரதேச செயலாளர் பிரிவுகள் ஆக்குதல்,
இந்தத் தொகுதியில் காணப்படுகின்ற 3 பிரதேச சபைகளையும் 5 பிரதேச சபைகள் ஆக்குதல்,
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து தமிழ் பிரதேசங்களிலும் குறிப்பாக, காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகமாகவுள்ள பட்டிருப்புத்தொகுதியிலுள்ள படுவான்கரைப் பிரதேசத்திலுள்ள அனைத்து வீதிகளுக்கும் வீதி மின்விளக்குகளை பொருத்துதல்.
வெல்லாவெளி பிரதேசத்திலுள்ள தும்பாலை ஆற்றை புனரமைத்து, தும்கேணிக்குளத்துடன் இணைத்தல் ஆகியவை தொடர்பில் குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
4 hours ago