2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பூகோள வரைபடம், தரவுகள் பொதி வெளியிடும் நிகழ்வு

Suganthini Ratnam   / 2015 மார்ச் 04 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் கீழ் இயங்கும் கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தினால் இபார்ட் திட்டத்தின் நிதியீட்டின் மூலம்  நடைமுறைப்படுத்தப்படும் பங்குபற்றலுடனான கரையோர வலய விசேட முகாமைத்துவ திட்டத்தின் மூலம் வாகரை பிரதேசத்தின் பூகோள வரைபடம் மற்றும் தரவுகள் பொதி வெளியிடும் நிகழ்வு,  பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.ராகுலநாயகி தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

2014ஆம் ஆண்டு சுமார் 2.5 மில்லியன் ரூபாய் செலவில் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்த இத்திட்டம், ஜி.ஐ.எஸ். தரவுகள் ஜி.பி.எஸ். மற்றும் ஆர்.எஸ். தொழில்நுட்பத்தின் மூலம் செய்துமுடிக்கப்பட்டது.

இதன் உத்தியோகபூர்வ ஆவணங்களான இறுவெட்டு மற்றும் புத்தகங்களை உத்தியோகபூர்வமாக பிரதேச செயலாளரிடம் கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவளங்கள் முகாமைத்துவ திணைக்கள மாவட்ட திட்ட இணைப்பாளர்  ஏ.கோகுலதீபன் கையளித்தார்.

இந்த நிகழ்வில் கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவளங்கள் முகாமைத்துவ திணைக்கள உத்தியோகஸ்தர்கள், பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள், கிராம உத்தியோகஸ்தர்கள், திட்ட உத்தியோகஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந்த ஆண்டு  84 மில்லியன் ரூபாய் விசேட முகாமைத்துவ திட்டத்துக்காகவும் வாவி எல்லைப்படுத்தும் பணிக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட திட்ட இணைப்பாளர்  ஏ.கோகுலதீபன் தெரிவித்தார்.

அத்தோடு  வாவி முகாமைத்துவம், தாவர நடுகை, அனர்த்த முகாமைத்துவ செயற்பாடுகள், தோணாக்களை புனரமைத்தல், கடற்கரையோர மரநடுகை, மலசலகூடங்களை அமைத்தல், சேதனமுறை விவசாயச் செய்கை, வாழ்வாதார அபிவிருத்தி திட்டங்கள் போன்றன நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X