2025 மே 20, செவ்வாய்க்கிழமை

முதியோர்களுக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கிவைப்பு

Kanagaraj   / 2015 மார்ச் 03 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்,ஏ.எச்.ஏ.ஹுஸைன்   

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி நகர லயன் கழகத்தின் ஏற்பாட்டில் முதியோர்களுக்கான இலவசமாக மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வு படுவான்கரைப் பிரதேசமான அரசடித்தீவில் திங்கட் கிழமை (02) இடம் பெற்றுது. 

அரசடித்தீவு சக்தி மகளிர் இல்லத்தில் இடம் பெற்ற இந் நிகழ்வில் களுவாஞ்சிகுடி அதாரவைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் வைத்திய ஆலோசனையையும், பரிசோதனையையும் மேற்கொண்டிருந்தார். 

இதில் கலந்து கொண்ட 125 பேருக்கு இலவச பரிசேதனையின் பின்னர் மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. 

இதன்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை, லயன் கழக தலைவர் அ.கந்தவேள், ஆகியோர் கலந்து கொண்டு கண்ணாடிகளை உத்தியோக பூர்வமாக வழங்கிவைத்தனர். இக் கண்ணாடிகளை கழகத்தின் பொருளாளர் என்.ஆனந்தராச குடும்பத்தினர் அன்பளிப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 
  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X