2025 மே 20, செவ்வாய்க்கிழமை

அமெ. தூதுவராலய பணிப்பாளர் - மட்டு. ஊடகவியலாளர்கள் சந்திப்பு

Suganthini Ratnam   / 2015 மார்ச் 04 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்,ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு பிராந்திய ஊடகவியலாளர்களுக்கும் ஐக்கிய அமெரிக்க தூதுவராலயத்தின் பணிப்பாளருக்குமான சந்திப்பு இன்று புதன்கிழமை  ஈஸ்ட் லகூண் ஹோட்டலில நடைபெற்றது.

மாவட்டத்திலுள்ள ஊடகவியலாளர்கள் செய்திகளை சேகரிக்கும்போது முகங்கொடுக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் தேவைகள் பற்றி இதன்போது ஆராயப்பட்டன.

அமெரிக்க தூதுவராலயத்தின் ஊடக, கலாசார மற்றும் கல்வி அலுவல்கள் பணிப்பாளர் நிக்கோலி சூலீக் மற்றும் தூதுவராலயத்தின் தொடர்பாடல் உதவியாளர் ஒமர் இராஜரெட்ணம் ஆகியோர் ஊடகவியலாளர்களின் தேவைகள், பிரச்சினைகள் பற்றி கேட்டறிந்தனர்.

இதன்போது அச்சு, இலத்திரனியல், ஊடகங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்ட இந்த சந்திப்பில்,  அமெரிக்க நாட்டு ஊடகவியலாளர்களை கிழக்கு ஊடகவியலாளாகளுடன் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு பணிப்பாளர், அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X