Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2015 மார்ச் 04 , மு.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
யுனிசெப்பின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி டாக்டர் போலா பலன்சியா தலைமையிலான தூதுக்குழுவினர், கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட்டை, இன்று புதன்கிழமை (04) சந்தித்து கலந்துரையாடினர்.
திருகோணமலையிலுள்ள முதலமைச்சர் காரியாலயத்திலேயே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது. கிழக்கு மாகாணத்திலுள்ள சிறுவர்களின் பாதுகாப்பு, கல்வி மற்றும் சிறுவர் நலமேம்பாடு சமூக நலத்திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.
எதிர்காலத்தில் சிறுவர் நலத் திட்டங்களை மேம்படத்துவதற்கான வழிகளை ஏற்படுத்துவது பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
தனது எதிர்கால வேலைத் திட்டங்களிலும் சிறுவர் நலத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவிருப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், யுனிசெப் பிரதிநிதிகளிடம் இதன்போது விளக்கிக் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
4 hours ago