2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஆயுர்வேத தெரப்பி சிகிச்சை பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள்

Princiya Dixci   / 2015 மார்ச் 04 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

மருந்துகளோ அறுவை சிகிச்சைகளோ இன்றி ஆயுர்வேத தெரப்பி மூலம் சிகிச்சை பெற்று குணமானவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு கலாசார மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்றது.

காக்கை வலிப்பு மற்றும் மூட்டு வீக்கம் நோயினால் பீடிக்கபட்டு மருந்துகள் மூலம் பெற்றுக்கொண்ட சிகிச்சை பலனின்றிய நிலையில் இரண்டு மாதங்கள் தெரப்பி சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளதாக யோகா சிகிச்சை நிபுணர் செல்லையா துரையப்பா தெரிவித்தார்.

25 வருடங்களாக காக்கை வலிப்பினால் பாதிக்கப்பட்ட ஆணுக்கும் மூட்டு வீக்கத்தால் அவதியுற்ற பெண்ணுக்குமே இவ்வாறு சிகிச்சை பெற்றமைக்காக சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா பிரதம அதிதியாக கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X