2025 மே 20, செவ்வாய்க்கிழமை

220 பேருக்கு டெங்கு

Suganthini Ratnam   / 2015 மார்ச் 05 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா, எஸ்.பாக்கியநாதன்

இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே இந்த வருடம் அதிகளவான டெங்கு நோயாளர்கள்  இனங்காணப்பட்டுள்ளதுடன், இந்த மாவட்டத்தில் ஜனவரி மாதத்திலிருந்து இதுவரையில்  220 பேருக்கு டெங்கு அடையாளம் காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம், மாவட்ட இளைஞர் கழக சம்மேளனம் மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனம், மட்டக்களப்பு மாநகரசபை மற்றும் பொலிஸாரின்  அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் வியாழக்கிழமை (5) காலை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதன்போதே  அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,

'மட்டக்களப்பில் டெங்கின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த மாவட்டத்தின்; காத்தான்குடியிலும் ஆரையம்பதியிலும் டெங்கினால் மரணங்களும்  இடம்பெற்றுள்ளன. மட்டக்களப்பு மாநகரசபை பிரிவில் கோரகல்லிமடு, கல்லடி, நாவற்குடா, மாமங்கம் N;பான்ற பிரதேசங்களில் டெங்கின் தாக்கம் அதிகரித்துள்ளது.

இது தொடர்பில் எமது சமூகம் விழிப்புடன் இருக்கவேண்டும். வீடுகள், வீட்டுப்புறச்சூழலை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் டெங்கு நுளம்புகள் பெருகுவதை தடுக்கமுடியும்.

வீடுகளின் நீர்த்தாங்கிகளில் டெங்கு நுளம்புக்குடம்பிகள் உற்பத்தியாகும். இதில் அவதானமாக இருக்கவேண்டும்.
டெங்கு நுளம்புகளின்; பெருக்கத்தை  இல்லாமல் செய்வதற்கு அல்லது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயலாற்றவேண்டும்.

அந்த வகையில், ஒரு சமூகத்தின் பெறுமதியான இளைஞர் சமூகம் முன்வந்து இந்த டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கையை மேற்கொள்வது பாராட்டத்தக்கது. அதற்காக நான் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு அலுவலகம், இளைஞர் சம்மேளனத்துக்கு நன்றி கூறுகின்றேன் என மேலும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X