Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 மார்ச் 05 , மு.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனை பாராட்டி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏறாவூர் மத்திய செயற்குழு அறிக்கை ஒன்றை இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏறாவூர் மத்திய செயற்குழுவின் கொள்கை பரப்புச் செயலாளர் யூ.எல்.முஹைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'கிழக்கு மகாணசபையில் ஆட்சி அமைப்பது தொடர்பாக இருந்துவந்த இழுபறி நிலைமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் சமயோசிதமாக அரசியல் பட்டறிவு சாணக்கியத்துடன் எடுத்த முடிவு, கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் இன ஐக்கியத்தை வலுப்படுத்த உதவியுள்ளது.
இது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவாகும். கிழக்கு மாகாணசபை ஆட்சியமைப்பு தொடர்பில் கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் இன முறுகல் ஏற்பட்டு விடுமோ என அனைவரும் அஞ்சிக்கொண்டிருந்த சமயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் எடுத்த துணிச்சலும் அரசியல் சாணக்கியமும் மிக்கதான இறுதிநேர முடிவு இரு இனங்களுக்கிடையிலும் நிம்மதி பெருமூச்சை ஏற்படுத்தியுள்ளது.
பேரினவாதிகளோடு ஒட்டி உறவாடும் முன்னாள் ஆயுததாரிகளான முன்னாள் மாகாண ஆட்சியாளர்கள் 'ஆதரவு தருகின்றோம் வாருங்கள் ஆட்சியமைப்போம்' என்று சம்பந்தனின் கால்களில் விழுந்தபோதும் கொள்கையில் உறுதியாக இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சோரம் போகவில்லை.
கொள்கையற்ற அத்தகைய குழப்பவாதிகளை நிராகரித்து விட்டு கொள்கைப்பிடிப்புடனும் சிறுபான்மை இனப் பற்றுடனும் உறுதியாக இருந்து முன்னுதாரண வழிகாட்டலைச் செய்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏறாவூர் மத்திய செயற்குழு பாராட்டுகிறது.
அதேவேளை, இன்னும் நூறாண்டுகள் போனாலும் இந்த இணக்கப்பாட்டு அரசியலை எதிர்காலத்திலும் தமிழ,; முஸ்லிம் சமூகங்கள் இணைந்து தொடர்ந்து முன்னெடுக்கவேண்டும் என்றும் எமது செயற்குழு கேட்டுக்கொள்கின்றது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
4 hours ago