2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சட்ட சபையில் பெண்களுக்கு இடம் வழங்கப்பட வேண்டும்

Sudharshini   / 2015 மார்ச் 07 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஏனைய நாடுகளின்   சட்டசபையில் பெண்களுக்கு இடம் வழங்கப்படுவதைப் போல,  இலங்கை  சட்டசபையிலும்                 பெண்களுக்கு    இடம் வழங்கப்பட்டால்    மாத்திரமே சனத்தொகையில் 52வீதமான பெண்களின் பங்களிப்பு அரசியலில் காணப்படும்.

 பெண்கள் சம்பந்தமான     பிரச்சினைகளுக்கு   தீர்வு காண்பதுக்கு நாடாளுமன்றங்களிலும் மாகாண சபைகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் அவசியம்; காணப்பட வேண்டும் என காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளருமான சல்மா ஹம்சா தெரிவித்தார்.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி யாழ்பாணத்தில் வெள்ளிக்கிழமை(06) நடைபெற்ற செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்;.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

 இலங்கையிலும் சர்வதேசத்திலும்; பெண்களுக்கான உரிமைகள் சட்டமாக்கப்பட்ட போதிலும், அதனை அனுபவிப்பது குறைவாகவே காணப்படுகிறன. பெண்கள்  சமூக, பொருளாதார , அரசியல் , கலாசார ரீதியாக                                            சவால்களை   எதிர்நோக்க    வேண்டியுள்ளது.

 சமூக மட்டத்தில் பால் நிலைப்பாகுபாடு மிகவும் பாரிய பங்கு வகிக்கின்றது. அந்த வகையில் பெண்களுக்கு அரசியலில் ஒதுக்கப்படும் கோட்டா முறை   ஆசிய   நாடுகளிலேயே  இலங்கையில்  இல்லை. ஆனால் பெரும்பாலான நாடுகளில் இந்த திட்டம் நடைமுறையில் இருக்கிறது.

இதில் ஒன்று, பொருளாதார ரீதியாக பெண்கள் தகுதியற்ற சில இடங்களில் கூடிய நேரம் வேலை செய்து குறைந்த வருமானத்தை பெறக் கூடியவர்களாக இருக்கின்றனர்.

இவர்களுக்கு தகுதியான வேலைகள் வழங்கப்படுவதில்லை. இவ்வாறான பாரபட்சம் பெண்களுக்கு                     பொருளாதார ரீதியாக காணப்படுகிறது. மதங்களுக்கிடையே சொத்து உரிமை போன்றவை காணப்பட்டாலும்                  பெண்கள்  அரசியலுக்கு செல்லும் போது பணம் அதிகமாக தேவைப்படுகிறது.

அரசியல் என்றால் வன்;முறை என்ற பிழையான நோக்கங்களினால்  பெண்கள் அரசியலுக்கு வருவதற்கான ஊக்கம் குறைவாகவே காணப்படுகின்றது.

 நாடாளுமன்றத்திலும் மாகாண சபைகளிலும் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த எந்த ஒரு பெண்மணியும்                                  காணப்படுவதில்லை   உள்ளூராட்சி மன்றங்களில்   சிலரை   காணக் கூடியதாக இருக்கிறது. இருப்பினும் தமிழ் பெண்கள் மிக அரிதாகவே இச்சபையில் காணப்படுகின்றனர்.

பெண்கள் சம்பந்தமான  பிரச்சினைகள   தீர்வு காண்பதுக்கு நாடாளுமன்றங்களிலும் மாகாண சபைகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் கட்டாயம் காணப்பட வேண்டும் என அவர்  தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X