Suganthini Ratnam / 2015 மார்ச் 08 , மு.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு சிறைச்சாலையில் பெண் கைதிகளுக்கு சுயதொழில் பயிற்சி செயலமர்வு ஞாயிற்றுக்கிழமை (8) காலை நடத்தப்பட்டது.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மட்டக்களப்பு சிறைச்சாலையின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு தேவை நாடும் மகளிர் அமைப்பினால் நடத்தப்பட்ட இந்த செயலமர்வில், செய்முறைப் பயிற்சியும் வழங்கப்பட்டது.
மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் எச்.வி.ஐ.பிரியங்கரவின் தலைமையில் நடைபெற்ற இந்த செயலமர்வில் தேவை நாடும் மகளிர்; அமைப்பின் இணைப்பாளர் சங்கீதா தர்மரஞ்சன், அதன் உத்தியோகஸ்தர் ஜெயதீபா பத்மசிறி, மட்டக்களப்பு சிறைச்சாலை நலன்புரி உத்தியோகஸ்தர்களான பி.சுசிதரன், எல்.ஜெயசுதாகரன், எம்.ஐ.சித்தி சபீனா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்காக தேவை நாடும் மகளிர்; அமைப்பினால் சுயதொழில் பயிற்சி வழங்கப்படுகின்றது. அதில் ஒரு கட்டமாக மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள பெண் கைதிகளுக்கு சுயதொழில் பயிற்சி செயலமர்வு மகளிர் தினத்தையொட்டி நடத்தப்பட்டதாக தேவை நாடும் மகளிர் அமைப்பின் இணைப்பாளர் சங்கீதா தர்மரஞ்சன் தெரிவித்தார்.
31 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
36 minute ago