Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 மார்ச் 08 , மு.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
பெண்களுக்கு அறிவூட்டுவதிலும் அவர்களுக்கு உயர் அந்தஸ்து பெற்றுக்கொடுப்பதிலும் ஆண்கள் கடமைப்பட்டவர்களாக இருக்கின்றார்கள் என சவூதி அரேபியாவின் அறிஞர் அஷ்ஷெய்ஹ் அப்துல் அஸீஸ் ஹுமைன் அல் ஹுமைன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் புன்னைக்குடா வீதியில் பெண்கள் அரபுக் கல்லூரிக்கான புதிய கட்டடம் நேற்று சனிக்கிழமை மாலை சவூதி அரேபிய நாட்டு கொடைவள்ளல்களால் திறந்துவைக்கப்பட்டது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
பெண்கள் அரபுக் கல்லூரி அதிபர் அஷ்ஷெய்ஹ் ஜே.அப்துல் ஹலீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சவூதி அரேபிய கொடைவள்ளல்களான அப்துல் அஸீஸ் ஹுமைன் அல் ஹுமைன், அப்துல் றஹ்மான் திஹாம் அத்திஹாம், அஹமத் இப்னு அப்துல்லாஹ் அர்ரஷீத், அப்துல்லாஹ் ஹவாத், அபூசுஹைப் முஹம்மது முஸைதீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'நன்மையான விடயங்களிலே நீங்கள் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பாக இருந்து செயற்படுங்கள். தீமையான விடயங்களிலே நீங்கள் விலகியிருந்து அவற்றைத் தடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லப்பட்டிருக்கின்ற அருள்வாக்கின் அடிப்படையிலே இந்த பிரமாண்டமான கட்டடப்பணி ஒரு நன்மையான காரியத்துக்கு செய்து தரப்பட்டுள்ளது.
வாழ்க்கையின் பாதித் துணையான பெண்களுக்கு நல்லறிவை ஊட்டக்கூடிய ஒரு சிறப்பு வாய்ந்த இடமாக இந்தக் கல்விக் கூடம் திறந்து வைக்கப்படுகின்றது.
ஒரு பெண்ணுக்கு கல்வியூட்டுவதானது ஒரு கல்விக் கூடத்தை நிறுவி உலகுக்கு அறிவூட்டுவதற்குச் சமனானது என்று கூறப்பட்டுள்ளது. பெண்களை உயர்வான அந்தஸ்துக்கு இட்டுச் செல்வதற்கு அவர்களுக்கு நல்லறிவை ஊட்டவேண்டும்.
பெண்கள் ஆன்மிக மற்றும் லௌகீக அறிவு என்பனவற்றில் தேர்ந்தவர்களாக இருக்கவேண்டும். இதன் மூலம் அவர்கள் இம்மை வாழ்விலும் மறுமை வாழ்விலும் வெற்றியடைய முடியும். வாழ்க்கைக்கான சகல அம்சங்களிலும் ஒரு பெண்ணின் பாத்திரப் பங்கு மிக அவசியமானது.
சீரான குடும்பம் சீரான சமூகம், சீர் பெற்ற மனித குலம் என்று பரந்து விரிந்து செல்கின்ற இயங்கியல் முறையில் ஒரு பெண்ணின் பாத்திரம் அத்தியாவசியமானது' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago