Sudharshini / 2015 மார்ச் 08 , மு.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
–வடிவேல் சக்திவேல்
நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தலும் இந்து மதத்தை வளர்ப்பதும், இந்துக் கொள்கைளை மேலோங்கச் செய்வதுவும் எனது ஒரு பணியாக இருக்கின்றது. எனது அரசியற் பிரவேசம் எனது சமயத்துக்கு முரணானதாக இருந்தால் நான் அரசியலிலிருந்து விலகுவதுக்கு தயாராக இருக்கின்றேன் என மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான இரண்டு நாட்கள் கொண்ட வதிவிடப் பயிற்சிநெறி சனிக்கிழமை (07) மட்டக்களப்பு இந்து கலாசார மண்டபத்தில் ஆரம்பமானது. இதன் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து அவர்; தெரிவிக்கையில்,
அறநெறிப் பாடசாலைகள் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்திலேயே உருவாக்கப்பட்டன. தற்போது இந்து கலாசார திணைக்களம் அறநெறிப் பாடசாலைகளை வளப்படுத்தி வருகின்றது. அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் அனைவரும் முற்பிறப்பில் செய்த புண்ணியத்தினால்தான் தற்போது மகத்தான ஆசிரியர் சேவை செய்து வருகின்றார்கள். இந்த புனிதமான பணியைச் செய்கின்றவர்கள் அனைவரும் புனிதர்களாக மாறவேண்டும்.
தமிழுக்கும் சைவத்துக்கும் பாரம்பரிய பண்பாடுகள் இருக்கின்றன. இந்தப் பண்பாடுகளைப் நாங்கள் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டும். வெளிநாடுகளிலும் நமது வட மாகாணத்திலும் தமிழ், சைவ கலாசாரம் நன்கு பேணப்பட்டு வருகின்றதை அவதானிக்க முடிகின்றது. ஆனால், நமது கிழக்கு மாகாணத்தில் இவ்வாறான கலாசாரம் மாறுபட்டு நிற்கின்றது.
அறநெறிப்பாடசாலை நேரத்தில் ஏனைய பிரத்தியேக வகுப்புக்கள் நடைபெறுவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுக்க இருக்கின்றோம். தேசிய ரீதியில் இவற்றுக்குரிய சட்டம் கொண்டு வராவிட்டாலும் பிரதேச சபை, நகரசபை, மாநகர சபை, மாகாணசபை போன்றவற்றில் சட்டம் கொண்டு வருவதற்கு உரிய முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் பெற்றுக் கொடுப்பதற்கு மிக விரைவில் நடவடிக்கை எடுப்பேன். மிக நீண்டகாலமாக இருந்துவரும் இப்பிரச்சனைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும்.
இந்து கலாசார திணைக்களம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகுந்த சேவையாற்றி வருகின்றது. ஆனால், அதன் பலாபலன்களை எமது மாவட்டம் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நான் இருப்பெதெல்லம் இந்து சமயம் பேணப்பட வேண்டும், இந்து சமயம் வளர்க்கப்பட வேண்டும், எங்கள் மக்கள் உண்மையான இந்துக்களாக வாழவேண்டும் என்பதற்காகவே தான் என அவர் மேலும் தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago