Gavitha / 2015 மார்ச் 08 , மு.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்
இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையில் முதலுதவி பயிற்சி பெற்று அதில் நடத்தப்பட்ட பரீட்சையில் சித்தியடைந்த தொண்டர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (07) இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையில் கடந்த வருடம்; நடாத்தப்பட்ட அடிப்படை முதலுதவி பயிற்சி பரீட்சையில் சித்தியடைந்த 15 பேருக்கும் முதலுதவி பயிற்சி பரீட்சையில் உயர்தர சித்தியடைந்த 8 பேருக்கும் இதன்போது சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் தலைவர் த.வசந்தராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முதலுதவி இணைப்பாளர் சீ.கஜேந்திரன் முதலுதவிப் போதனாசிரியர் ஆ.சோமசுந்தரம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவு வைத்திய அதிகாரி கே.விவேகானந்தன் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
31 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
36 minute ago