2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பாவனைக்குதவாத இறைச்சி, மீன்கள் கைப்பற்றி அழிப்பு

Suganthini Ratnam   / 2015 மார்ச் 08 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பொதுச்சந்தையிலுள்ள பலசரக்கு கடையொன்றிலிருந்து  மனித பாவனைக்கு உதவாத 45 கிலோ மாட்டு இறைச்சியையும் 10 கிலோ மீன்களையும் காய்ந்த இறைச்சியையும் ஞாயிற்றுக்கிழமை (8) கைப்பற்றி, அவற்றை அவ்விடத்தில் அழித்துள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.றஹ்மத்துல்லாஹ் தெரிவித்தார்.

காத்தான்குடி பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து   அங்கு சென்று சோதனை மேற்கொண்டதாகவும் இதன்போது, மாட்டு இறைச்சி மற்றும் மீன்கள்  குளிரூட்டியில் வைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மேற்படி பலசரக்கு கடை உரிமையாளருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீனின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்த நடவடிக்கையில் மேற்பார்வை சுகாதார பரிசோதகர் ஏ.எம்.றபீக், பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.றஹ்மத்துல்லாஹ் ஆகியோர் ஈடுபட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X