Gavitha / 2015 மார்ச் 08 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்
இலங்கையின் வாவிகளில் நீளத்தில் இரண்டாவது இடத்தைப் பெற்ற மட்டக்களப்பு வாவியில் மீன்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதனால், வாவித் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
உல்லாசப் பயணிகளை அதிகமாகக் கவரும் நண்டு மற்றும் இறால் என்பன முற்றாக இல்லாமல் உள்ளதனால், வளர்ப்பு இறால்கள் கிலோ ரூபாய் 1,000 முதல் 1,200 வரை விற்பனை செய்யப்படுகின்றன.
இதனால் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள குடும்பங்களின் தலைவர்கள் தங்கள் பிள்ளைகள் சகிதம் தூண்டிலில் மீன்பிடித்து தமது அன்றாட உணவுத் தேவைக்குப் பயன்படுத்துகின்றனர்.
வறுமை நிலையில் உள்ள மாணவர்கள் கூட மீன்களைப் பிடித்து விற்பனை செய்வதன் மூலம் சேகரிக்கப்படும் பணத்தை தமது கல்விச் செலவுக்காக பயன்படுத்துவதாகத் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 12,225 குடும்பங்கள் வாவித் தொழிலை தங்களது வாழ்வாதாரமாக நம்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

31 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
36 minute ago