2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மகளிர் தினத்தையொட்டி பேரணி

Sudharshini   / 2015 மார்ச் 08 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,எஸ். பாக்கியநாதன்

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் பிரிவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (8) பெண்களின் பேரணியொன்று நடைபெற்றது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் பிரிவு தலைவி திருமதி செல்வி மனோகரன் தலைமையில் நடைபெற்ற இப்பேரணி, மட்டக்களப்பிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமை அலுவலகத்திலிருந்து ஆரம்பமாகி மட்டக்களப்பு காந்திப் பூங்கா ஊடாக சென்று மீண்டும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தலைமையலுவலகத்தில் முடிவடைந்தது.

பேரணிக்கு முன்பாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியலுவலகத்தில் மகளிர் தின வைபவம் நடைபெற்றது.

இந்நிகழ்வில், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர் .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X