Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 மார்ச் 09 , மு.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
பெண்களை விளம்பரப்பொருளாக பயன்படுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது. பெண்கள் இன்று விளம்பரங்களுக்காகவே பயன்படுத்தப்படுகின்றனர் என்று காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் தெரிவித்தார்.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி காத்தான்குடி பிரதேச செயலக சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு, திவிநெகு திணைக்களத்தின் காத்தான்குடி சமூக அபிவிருத்திப்பிரிவு, பிரதேச கலாசார மத்திய நிலையம் என்பன இணைந்து காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (8) நடத்திய மகளிர் தின நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'தனிமனித சுதந்திரம் பேணப்படவேண்டும் என்று ஐரோப்பியாவில் கூறுகின்றனர். இதற்கு ஒரு வரையறை அவர்களிடம் கிடையாது. ஆணும் ஆணும் திருமணம் செய்தல், பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்தல் என்பன தனிமனித சுதந்திரம் எனக் கூறுகின்றனர். இதனால் பாரிய சமூக சீரழிவுகளை அந்த நாடுகள் எதிர்நோக்குகின்றன.
இஸ்லாத்தில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறை, ஆணாதிக்கம் உள்ளதாக ஐரோப்பிய நாடுகள் தெரிவிக்கின்றன. ஆனால், இஸ்லாம் அவ்வாறு கூறவில்லை.
பெண்களின் உரிமை பற்றி இஸ்லாம் மிகத்தெளிவாக கூறியுள்ளது. அரசியல்த்துறை, நீதித்துறை, சமூகவியல் போன்ற துறைகளில் இஸ்லாமியப் பெண்களின் ஆர்வம் இன்று அதிகரித்துவருகின்றது' என்றார்.
இந்த நிகழ்வில் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன், காத்தான்குடி பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சிவராஜா, காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் சிரேஷ்ட உளநல வைத்திய நிபுணர் சுசிகலா பரமகுருநாதன் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றதுடன், 18 கர்ப்பிணிகளுக்கு போஷாக்குப்பொதிகளும் வழங்கிவைக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago