Gavitha / 2015 மார்ச் 09 , மு.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

-த.நவோஜ்
அரசின் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் ரண்பிம காணி உறுதிப்பத்திரம் வழங்கும் வைபவம் செவ்வாய்க்கிழமை (10) நடைபெறவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ஸ் தலைமையில், மட்டக்களப்பு கல்லடி கிழக்குப் பல்கலைக்கழக விபுலானந்தா இசை நடனக் கல்லூரியில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில், காணி அமைச்சர் கே.டி.எஸ்.குணவர்த்தன பிரதம அததியாக கலந்து கொண்டு காணி உறுதிப்பத்திரங்களை வழங்கி வைக்கவுள்ளார்.
இதன்போது, 3,500 பயனாளிகளுக்கு காணி அனுமதிப்பத்திரம் மற்றும் காணி உறுதிப்பத்திரம் என்பன வழங்கி வைக்கப்படவுள்ளது.
பயனாளிகளின் பெயர் பட்டியல் கிராம சேவை உத்தியோகஸ்தரிடம் உள்ளதால், பயனாளிகள் அவர்களுக்கான அனுமதி இலக்கத்தை கிராம சேவை உத்தியோகஸ்தரிடம் தொடர்பு கொண்டு அதனை பெற்றுக் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் காணி பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
31 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
36 minute ago