Suganthini Ratnam / 2015 மார்ச் 09 , மு.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எம்.அஹமட் அனாம்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கல்குடாத்தொகுதி அங்கத்தவர்களுடனான சந்திப்பும் கருத்தரங்கும் வாழைச்சேனை கிறிஸ்தவ வாலிபர் சங்கக் கட்டத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன் மற்றும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா, தமிழரசுக்கட்சி இளைஞர் அணித் தலைவர் கி.கேயோன் உட்பட கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வரலாறு மற்றும் தற்கால அரசியல் சூழ்நிலை தொடர்பாகவும் இக்கருத்தரங்கில் ஆராயப்பட்டதுடன், கட்சியின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாகவும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
32 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
37 minute ago