Gavitha / 2015 மார்ச் 08 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா,வடிவேல் சக்திவேல்
100 நாள் வேலைத்திட்டத்துக்கு மேலதிகமாக மாகாணசபைகளுக்கான அதிகாரங்கள் அதிளவில் பகிரப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார இராஜாங்க அமைச்சர் ஹசன் அலி தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் நிலவும் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்துவைப்பதற்கான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன பணித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளின் நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக இன்று (08) காலை சுகாதார இராஜாங்க அமைச்சர் ஹசன் அலி மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டார்.
இதன்முதல் கட்டமாக இன்று காலை 9.00 மணியளவில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்த அமைச்சரை வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சர் சுகுணன் வரவேற்றார்.
அதனைத்தொடர்ந்து வைத்தியசாலையை சுற்றிப்பார்வையிட்ட அமைச்சர், அங்குள்ள குறைநிறைகளை கேட்டறிந்தார்.
அத்துடன் வைத்தியசாலைகளின் நிலைமைகள் தொடர்பில் வைத்திய அத்தியட்சரினால் அமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இந்த விஜயத்தின் போது, கிழக்கு மாகாணசபையின் விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கமும் இணைந்திருந்ததுடன் அமைச்சின் செயலாளர்கள், உத்தியோகத்தர்களும் வருகைதந்திருந்தனர்.

31 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
36 minute ago