Suganthini Ratnam / 2015 மார்ச் 09 , மு.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.பாக்கியநாதன்
மதுபானப் பாவனையில் மட்டக்களப்பு மாவட்டம் முதலாவதாக வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மதுபானப் பாவனையினால் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் ஊர்வலமும் வீதி நாடகமும் மட்டக்களப்பு நகரில் திங்கட்கிழமை (09) நடைபெற்றன.
பிரிட்டிஷ் கவுன்;சிலின் 2014 மற்றும் 2015ஆம் ஆண்டு மாணவர்களை இணைக்கும் திட்டத்தின் ஒரு கட்டமாக மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மாணவர்களினால் ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது. கல்லூரியிலிருந்து ஆரம்பமான ஊர்வலம், மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது.
இந்த ஊர்வலத்தின்போது அரசடிச்சந்தி, நகர மணிக்கூட்டுக்கோபுர சந்தி, பஸ் நிலையம் என்பவற்றில் மதுபானப் பாவனையால் ஏற்படும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வூட்டும் வீதி நாடகங்களும் நடைபெற்றன.
27 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
32 minute ago