2025 மே 20, செவ்வாய்க்கிழமை

'பிறருக்காக வாழ்கின்றவர்கள் எதையும் யாரிடத்திலிருந்தும் எதிர்பார்ப்பதில்லை'

Suganthini Ratnam   / 2015 மார்ச் 09 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்   

இந்த உலகத்தில் கோடிக்கணக்கானோர் வாழ்கின்றார்கள். அவர்களில்  பெருமளவானோர் தங்களுக்காகவும் தங்கள் குடும்பத்தினருக்காகவும் மட்டும் வாழ்ந்துகொண்டிருக்கையில்,  சிலர் மட்டுமே பிறருக்காக வாழ்கின்றார்கள். பிறருக்காக வாழ்கின்றவர்கள் எதையும் யாரிடத்திலிருந்தும்  எதிர்பார்ப்பதில்லை. தூற்றுவோர் தூற்றினாலும் அதற்கு அவர்கள் செவி மடுப்பதில்லை.   அல்லல்படுவோர்க்கு உதவுவதே அவர்களின் தூரநோக்கு. அத்தகைய நோக்கை உடையவர்களே உண்மையான தொண்டர்கள் என்று மட்டக்களப்பு மாவட்ட செஞ்சிலுவைக்கிளையின் தலைவர் த.வசந்தராஜா தெரிவித்தார்.
அடிப்படை முதலுதவி பற்றிய விளக்கமளிப்பு  ஞாயிற்றுக்கிழமை (08) இலங்கை செஞ்சிலுவைச்சங்க மட்டக்களப்புக்கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து  அவர்  தெரிவிக்கையில்,  

'செஞ்சிலுவைத் தொண்டர்களாகிய உங்களதும் உங்களைப் போன்றவர்களதும் விலை மதிப்பற்ற சேவையை இலங்கை செஞ்சிலுவைச்சங்கம் ஒருபோதும் மறக்காது. பொருத்தமான சந்தர்ப்பங்களில் தொண்டர்களின் மகத்தான சேவையை இலங்கை செஞ்சிலுவைச்சங்கம் மீட்டுப்பார்ப்பதுண்டு.

இனமுறுகல் காலத்தில் அடிக்கடி நடந்த செல் வீச்சுகளின்போதும் துப்பாக்கி வெடிகளின்போதும் காயமுற்ற எத்தனையோ குடிமக்களை இறப்புக்களிலிருந்து காப்பாற்றியவர்கள் தொண்டர்களாகிய நீங்களும் உங்களுக்கு முன்னே செயற்பட்ட தொண்டர்களும் ஆவர். அவர்களதும் உங்களதும் சேவையை மறக்கமுடியாது. உங்களதும் அவர்களதும் சேவை அளப்பெரியது, விலைமதிப்பற்றது' என்றார்.

இரத்ததானம் வழங்குவதற்கு மாவட்ட மக்கள் முன்வரவேண்டும். அதற்கு செஞ்சிலுவைத் தொண்டர்கள் பொதுமக்களுக்கு ஊக்கம் கொடுக்க வேண்டும் என்று இதன்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்குப் பொறுப்பான டாக்டர் கே.விவேகானந்தநாதன் வேண்டுகோள் விடுத்தார்.

மாவட்ட முதலுதவி இணைப்பாளர் சீனித்தம்பி கஜேந்திரனின் ஏற்பாட்டில் நடைபெற்ற அடிப்படை முதலுதவி பற்றிய விளக்களிக்கும் இந்நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மண்முனைப்பற்று பிரிவின் தலைவர் க.நவநாதன்,  சிரேஷ்ட முதலுதவி பயிற்றுநர் ஆ.சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X