2025 மே 20, செவ்வாய்க்கிழமை

'பெண்ணின் வலுவே சமூகத்தின் உயர்வு'

Suganthini Ratnam   / 2015 மார்ச் 09 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணியினரால் வருடாவருடம் நடத்தப்படும் சர்வதேச மகளிர் தினத்தையொட்டிய மகளிர் தின 2015ஆம் ஆண்டு நிகழ்வின்  தொனிப்பொருளாக 'பெண்ணின் வலுவே சமூகத்தின் உயர்வு'  என தமது கட்சியின் தீர்மானத்துக்கமைய ஞாயிற்றுக்கிழமை (08) சர்வதேச மகளிர் தினம் அனுஷ்டிக்கப்பட்டதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்  கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மட்டக்களப்பில் அமைந்துள்ள தலைமையகத்தில் நடைபெற்ற மகளிர் அணிக்குழு கூட்டத்திலேயே மேற்படி தொனிப்பொருள் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அண்மைக்காலமாக பெண்களுக்கு எதிரான திட்டமிட்ட வன்முறைகளும் விவாகரத்துக்களும் தலைதூக்க தொடங்குவதோடு அரசியலிலும் பெண்களின் பங்கு மிக மிக குறைவாகவே காணப்படுகின்றது.

பெண்களின் வலுவாக்கமே ஒரு சமூகத்தின் உயர்ச்சிக்கும் அடையாளத்துக்கும்; முக்கியமானதாகும். பெண்களை வலுவானவர்களாக உயர்த்தவேண்டியதும் சமூகத்தின் பொறுப்பாகும் என்பதை வலியுறுத்தும் முகமாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் தின நிகழ்வு, மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் (லேக் வீதி) அமைந்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் கட்சியின் மகளிர் அணித்தலைவி திருமதி. செல்வி மனோகர் தலைமையில் நடைபெற்றது.

அதில்   பிரதம அதிதியாக கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்  உட்பட பலரும் கலந்துகொண்டதாகவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்  கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன்  மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X