2025 மே 20, செவ்வாய்க்கிழமை

விபத்தில் சிறுமி மரணம்; வான் தீக்கிரை

Suganthini Ratnam   / 2015 மார்ச் 09 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,வா.கிருஸ்ணா,கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிவேம்பு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (8) மாலை இடம்பெற்ற விபத்தில் மாவடிவேம்பு பகுதியைச் சேர்ந்த நி.ஜசோ (12 வயது) என்ற சிறுமி சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்றிலிருந்து குருநாகலுக்கு சென்றுகொண்டிருந்த வான்,  தனியார் வகுப்பு முடிவடைந்து சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த இந்தச் சிறுமி மீது மோதியுள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த மக்கள் வானின் சாரதியை தாக்கியுள்ளதுடன், குறித்த வானையும் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.   

இந்த நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த ஏறாவூர் பொலிஸார், சாரதியை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்தச் சிறுமி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 07 இல் கல்வி கற்றுவருகின்றார்.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X