Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2015 மார்ச் 09 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டின் கரையோர மாவட்டங்கள் அனைத்திலும் சுனாமி எச்சரிக்கை தேசிய ஒத்திகைகள் செவ்வாய்க்கிழமை (10) மாலை நடைபெறவுள்ளன.
மட்டக்களப்பு, மண்முனை தெனி எருவில்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாற்றில் சுனாமி எச்சரிக்கை ஒத்திகை, நாளை மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்த சுனாமி ஒத்திகையில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், இராணுவத்தினர், களுவாஞ்சிக்குடி வைத்தியசாலை அதிகாரிகள், கல்வி வலயத்தைச் சேர்ந்தவர்கள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
கரையோர மாவட்டங்களான அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், புத்தளம், மன்னார், கொழும்பு, கம்பஹா, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, களுத்துறை மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இந்த சுனாமி எச்சரிக்கை ஒத்திகைகள் இடம்பெறவிருக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago