Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Sudharshini / 2015 மார்ச் 09 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம் முதல் தடவையாக கிழக்கு மாகாணத்தில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான ஒரு வருட கால டிப்ளோமா பயிற்சி நெறியை இம்மாதம் 21 திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக அதன் சிரேஷ்ட விரிவுரையாளர் கௌரி வாசுதேவன் திங்கட்கிழமை (08) தெரிவித்தார்.
மட்டக்களப்பு சத்துருக்கொண்டானிலுள்ள சர்வோதய மாவட்டப் பயிற்சிப் பாடசாலையில் ஒருவருட கால சிறுவர் பாதுகாப்பு டிப்ளோமா பயிற்சிநெறி நடைபெறவுள்ளது.இப்பயிற்சி நெறி வாரத்தின் இறுதி நாட்களில் நடைபெறும் .
இப்பயிற்சி நெறிக்கான பயிலுநர்களைத் தேர்ந்தெடுப்பதுக்கான நேர்முகப் பரீட்சைகள் இன்று சத்துருக்கொண்டான் சர்வோதய மாவட்டப் பயிற்சிப் பாடசாலையில் இடம்பெற்றது.
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கௌரி வாசுதேவன், சிறுவர் நன்நடத்தை அதிகாரி எம்.எம்.எச். நஜிமுதீன், தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் விரிவுரையாளர் யூ.எல்.எம். அஷ்கர், சர்வோதய நிலையத்தின் மாகாண இணைப்பாளர் ஈ.எல். ஆப்துல் கரீம் ஆகியோர் நேர்முக தேர்வுகளை நடத்தினர்.
இப்பயிற்சி நெறியில் கலந்துகொள்ள விரும்புவோர் 0777422690 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புக் கொண்டு மேலதிக விவரங்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
அடுத்த நேர்முகப் பரீட்சை மார்ச் 19ஆம் திகதி பிற்பகல் ஒரு மணிக்கு மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் சர்வோதய மாவட்டப் பயிற்சி நிலையத்தில் இடம்பெறவுள்ளதாகவும் பயிற்சி நெறியை தொடர விரும்புவோர் ஆவணங்களுடன் நேர்முக தேர்வில் பங்குபற்ற முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago