Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Kanagaraj / 2015 மார்ச் 10 , மு.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிகிரியா குன்றிலுள்ள கண்ணாடிச் சுவரில் தன் பெயரை எழுதினார் என்ற குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மட்டக்களப்பு, சித்தாண்டியைச் சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறியின் விடுதலைக்கான விண்ணப்பம் ஒன்றினை மட்டக்களப்பு சமூக விழிப்புணர்வு மன்றம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளது.
மட்டக்களப்பு சமூக விழிப்புணர்வு மன்றத்தின் தலைவர் பொ.மனோகரன் கையொப்பமிட்டு நேற்று திங்கட்கிழமை (09) இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'மட்டக்களப்பு, சித்தாண்டியை வசிப்பிடமாகக் கொண்ட செல்வி சின்னத்தம்பி உதயசிறி (27 வயது) என்ற யுவதி, கடந்த 14.02.2015 அன்று தன்னுடன் வேலை செய்யும் நண்பிகளுடன் உல்லாசப் பயணம் மேற்கொண்டு சிகிரிய ஓவியத்தைப் பார்வையிடச் சென்றிருந்த வேளை சிகிரிய ஓவியத்தின் மேல் எழுத்துக்களை எழுதினார் என்னும் அடிப்படையில் கைது செய்யப்பட்டு 02.03.2015 அன்று தம்புள்ள நீதி மன்றத்தினால் (வழக்கிலக்கம் 65381) இரண்டு வருடங்கள் சிறைதண்டனை வழங்கப்பட்டு அநுராதபுரம் சிறைச்சாலையில் சிறையிடப்பட்டார்.
இந்த யுவதி தனது தந்தையின் மரணத்தின் பின் வயது முதிர்ந்து கண்பார்வை குறைபாட்டுடன் நோய்வாய்ப்பட்ட நிலையிலுள்ள தனது தாயினை தனது வாழ்வாதார உழைப்பினூடாக பராமரித்து வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் ஓர் ஏழைக் குடிமகளாவாள். இவளின் சிறைவாசமானது தாயின் வாழ்வில் மேலும் சிக்கல் நிலையை ஏற்படுத்துவதுடன் இந்த யுவதியின் எதிர்கால வாழ்வும் சிக்கல் நிலைக்குத் தள்ளப்படலாம் என்பதனை தங்களின் மேலான கவனத்துக்கு அறியத்தருகின்றோம்.
எனவே, தண்டணை வழங்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வரும் சின்னத்தம்பி உதயசிறி என்ற யுவதி தனது அறியாமையின் காரணத்தினால் செய்ததாகக் கூறப்படும் தவறுக்காக மனம் வருந்துவதோடு எமது சமூக விழிப்புணர்வு மன்றமானது மட்டக்களப்பு வாழ் மக்களுடன் சேர்ந்து மன்னிப்புக் கோருகின்றோம்.
எனவே இந்த யுவதியினதும் அவளின் தாயினதும் எதிர்கால நல்வாழ்வுக்காக மட்டக்களப்பு வாழ் மக்கள் தங்கள் மேல் கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் இவ் யுவதியின் விடுதலைக்கான கருணை மனுவைப் பரிசீலனை செய்து பொது மன்னிப்பினூடாக இவருக்கு விடுதலையினைப் பெற்றுத்தருமாறு மிகவும் தயவுடனும் தாழ்மையுடனும், பண்பான தங்களிடம் பணிவாக கேட்டுக்கொள்கின்றோம்.
தங்களால் மேற்கொள்ளப்படும் இவ்யுவதியின் விடுதலைக்கான நடவடிக்கைக்கு மட்டக்களப்பு வாழ் மக்கள் என்றென்றும் நன்றியுடன் இருப்பார்கள் என்பதனை தங்களின் மேலான கவனத்திற்கு அறியத்தருகின்றோம்' என்று அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago