2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

விபத்துக்களில் ஒருவர் மரணம்; மூவர் காயம்

Suganthini Ratnam   / 2015 மார்ச் 10 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள வௌ;வேறு  விபத்துக்களில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.

களுதாவளையில்  இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ள விபத்தில் படுகாயமடைந்த ஒருவர், களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். களுதாவளையிலிருந்து களுவாஞ்சிக்குடிக்கு சென்றுகொண்டிருந்தபோது பஸ்; மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இது இவ்வாறிருக்க, களுவாஞ்சிக்குடி நகரிலுள்ள மாணிக்கப்பிள்ளையார் கோவிலுக்கு அருகில் நேற்று திங்கட்கிழமை  மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டியும் மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த கே.கிரிதரன் (வயது 29) ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும்,  சிகிச்சை பலனின்றி  அங்கு மரணமடைந்ததாக  களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த ரமணன் என்பவர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
மேலும், மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊறணியில் நேற்று திங்கட்கிழமை  இடம்பெற்ற விபத்தில்  படுகாயமடைந்த  முச்சக்கரவண்டிச் சாரதி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

ஊறணிச் சந்தியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறியுடன் வேகமாக வந்த முச்சக்கரவண்டி மோதியதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்த விபத்துக்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X