Suganthini Ratnam / 2015 மார்ச் 10 , மு.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டம் தொடர்பில் கிராம மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டம், காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இது தொடர்பான விழிப்புணர்வூட்டும் கூட்டம், காத்தான்குடி முதலாம் குறிச்சி அல் அக்சா மீனவர் சங்க கட்டடத்தில் திங்கட்கிழமை (9) நடைபெற்றது.
இங்கு கருத்துத் தெரிவித்த காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில், 'கிராமத்திலுள்ள மக்கள் பொதுவாக எதிர்நோக்கும் பிரச்சினைகளை எமக்கு அறியத்தந்தால், அதனை உரிய அதிகாரிகளுக்கு நாங்கள் முன்கொண்டுசெல்வோம்.
அத்துடன், சுயதொழில் மற்றும் சிறுகைத்தொழில்களில் ஈடுபட்டுவருபவர்கள் தங்களது தொழில்களை சிறப்பாக செய்வதற்கு தேவையான மேலதிக உதவிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கமுடியும்' எனத் தெரிவித்தார்.
இதன்போது அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டம் தொடர்பிலும் பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில்; காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில், திட்ட முகாமையாளர் கே.வாமதேவன், வலய முகாமையாளர் ஏ.எல்.இ.சட்.பஹ்மி, வலய உதவி முகாமையாளர் எம்.எச்.எம்.அன்வர், கிராம உத்தியோகஸ்தர் எம்.எம்.றவூப், பயனாளிகளும் கலந்துகொண்டனர்.
31 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
36 minute ago