Kanagaraj / 2015 மார்ச் 13 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர் வி.முரளிதரன் பற்றி புலம் பெயர்ந்த மற்றும் ஒரு சிலரால் வெளியிடப்படும் தன்னைப்பற்றிய அவதூறான தகவல்கள் உண்மைக்குப் புறம்பானது என்பதுடன், இவற்றை மக்கள் நம்பிவிடக்கூடாது, அதே நேரம் இவ்வாறன பிழையான தகவல்கள் வெளியிடப்படுவது மக்களைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்வதாகவே இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் வி.முரளிதரனின் செயலாளர் பொன் ரவீந்திரன் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மீள்குடியேற்ற பிரதி அமைச்சரும், தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சருமான வி.முரளிதரன் பற்றி வெளியிடப்பட்டு வரும் பிழையான தகவல்கள் பற்றி விளக்கமளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
நாடாளுமன்ற உறுப்பினர் வி.முரளிதரன் மீது சேறு பூசும் வகையில் சுமத்தப்பட்டுவரும் அரசியல் சூழ்ச்சின் வெளிப்பாடாக அவதூறான முறையில் பல்வேறு தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இவற்றில் எந்த விதமான உண்மைத் தன்மையும் இல்லை.
கருணா அம்மான் மீது நேற்றைய தினம் கொழும்பில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும், மனித உரிமைப்பிரச்சினைகளுக்கு உள்ளாகியிருக்கிறார். என்றெல்லாம் பல்வேறுபட்ட செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன.
இவ்வாறன தகவல்கள் வெளியிடப்படுவதனால் மக்களுக்குள் குழுப்பங்களை ஏற்படுத்தி அவருடைய அரசியல் செயற்பாடுகளை குழப்புகின்றதாகவே இருக்கின்றன. இவ்வாறான தகவல்களை நம்பி மக்கள் கலக்கமடையத்தேவையில்லை.
தமிழ் மக்களின் சமாதானத்திற்காகவே அவர் அரசியலில் செயற்பட்டு வருகின்றார். இந்த செயற்பாடு தொடர்ந்த வண்ணமே இருக்கும். ஸ்ரீ லங்கா சதந்திரக்கட்சியானது ஒரு தேசிய அளவிலான கட்சியாகும். அக்கட்சியின் உப-தலைவர்களில் ஒருவராக தொடர்ந்தும் செயற்பட்டு வருகையில் சுதந்திரக்கட்சிப்பதவி பறிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவருகின்றன.
ஆனால், நான் தொடர்ந்தும் உப தலைவராகவே இருந்து வருகிறேன் என்றும் வி.முரளிதரன் தெரிவித்தார்.
அரசியல் என்பது பொது நலன் சார்ந்தது என்ற வகையில் மக்களுக்கான எனது பணியைத் தொடர்ந்த வண்ணமே இருப்பேன். கடந்த மாதம் 28ஆம் திகதி ச ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளரான அனுர பிரியதர்சன யாப்பாவால் எனக்கான உப தலைவர் நியமனக்கடிதம் வங்கப்பட்டுள்ளது. இருப்பினும் தகவல்கள் சரியாகக் கிடைக்காத சிலர் தவறான செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.
இவ்வாறான பிழையான உண்மைக்குப் புறம்பான செய்திகளை மக்களும், ஆதரவாளர்களும் நம்பிவிட வேண்டாம். என்பதுடன் உண்மைகளை ஆராயும் தன்மையுடனும் செயற்படுதல் வேண்டும்.
அதே நேரம், தொடர்ச்சியாகவும், 2 வாராங்களுக்கு ஒருதடவை பிழையான பிற்போக்குத் தனமான தகவல்களை வெளியிடுவதில் மிகவும் கவனமாகச் செயற்படும் புலம்பெயர்ந்துள்ளமற்றும் ஒரு சில தரப்பினர் பிழியான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினரான முரளிதரனுக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரிடமிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் உப தலைவர் அவர்களே என்று விழிக்கப்பட்டுள்ளது. இது இதுவரையில் தொடர்ச்சியாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் வி.முரளிதரன் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் உப தலைவராகவே செயற்பட்டு வருகிறார் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
2 hours ago
2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
5 hours ago
6 hours ago