2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கிராம மட்ட அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பில் விஷேட கலந்துரையாடல்

Administrator   / 2015 மார்ச் 14 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரியுதாஜித்

100 நாட்கள் விஷேட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், கிராம மட்டங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் தொடர்பாக அறிவுறுத்தும் விஷேட கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை (13) மாலை மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எ.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகப்பிரிவுகளினதும் பிரதேச செயலாளர்கள், மாநகர சபை ஆணையாளர், திணைக்களத் தலைவர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள், திட்டமிடல் பிரிவுகளின் அதிகாரிகள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோருக்கு இடையே இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா ஆகியோர் விளக்கங்களையும் வழங்கினர்.

கிராமப்பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தினுள் பொதுக் குடிநீர் விநியோகம், பொது சுகநல வசதிகள், விளையாட்டுத் திடல்கள், சிறுவர் பூங்காக்கள், சனசமூக நிலையங்கள் மற்றும் கலாசார நிலையங்கள், முன்பள்ளி நிலையங்களின் அபிவிருத்திகள், கிராமப்புற மின்சார நீடிப்பு, சிறு நீர்ப்பாசன வசதிகள், கிராமப்புறப்பாதைகள், வாழ்வாதார அபிவிருத்திச் செயற்றிட்டங்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் என பல்வேறு வேலைத்திட்டங்கள் உள்வாங்கப்படவுள்ளன.

இந்த அபிவிருத்தித்திட்டமானது அரசாங்கத்தின் நிதிப் பங்களிப்பினுடன் 25 வீத சிரமதான பணி அடிப்படையிலும் செயற்படுத்தப்படவுள்ளன.

மாவட்டத்தின் கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு அமைய 345 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் ஒரு கிராம சேவையாளர் பிரிவுக்கு ஒரு மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டத்தை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதிக்குள் நிறைவு செய்யும் வகையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X