2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

'முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த பணிப்பு'

Suganthini Ratnam   / 2015 மார்ச் 15 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல்    

ஜனாதிபதியிடம்; முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய,  அவற்றை நடமுறைப்படுத்துவதற்காக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதியின் செயலாளரினால் பணிக்கப்பட்டுள்ளது.  இதற்கான பதில் கடிதம் ஜனாதிபதியின் செயலாளரிடமிருந்து தமிழ்மொழி மூலம் தனக்கு சனிக்கிழமை (14) கிடைத்ததாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை தெரிவித்தார்.

திருகோணமலையில் 03.03.2015 அன்று நடைபெற்ற கிழக்கு மாகாண ஒருங்கிணைக்குழுக் கூட்டத்துக்கு வருகைதந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை மூன்று கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கையளித்திருந்தார்.

'பட்டிருப்புத்தொகுதியிலுள்ள மிக முக்கிய தேவைகளை நிவர்த்திசெய்து தருமாறு கோரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மகஜர் கையளிக்கப்பட்டிருந்த அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டிருந்தாவது,  

பட்டிருப்புத்தொகுதியின் சனத்தொகை பரம்பலுக்கு ஏற்ப,  இந்தத் தொகுதியிலுள்ள 3 பிரதேச செயலாளர் பிரிவுகளையும்  5 பிரதேச செயலாளர் பிரிவுகள் ஆக்குதல்,

இந்தத் தொகுதியில் காணப்படுகின்ற  3 பிரதேச சபைகளையும் 5 பிரதேச சபைகள் ஆக்குதல்,

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து தமிழ்ப் பிரதேசங்களிலும் குறிப்பாக, காட்டு யானைகளின் அட்டகாசம்  அதிகமாகவுள்ள பட்டிருப்புத்தொகுதியிலுள்ள படுவான்கரைப் பிரதேசத்திலுள்ள அனைத்து வீதிகளுக்கும் வீதி மின்விளக்குகளை  பொருத்துதல்.

வெல்லாவெளி பிரதேசத்திலுள்ள தும்பாலை ஆற்றை புனரமைத்து, தும்கேணிக்குளத்துடன் இணைத்தல் ஆகியவை   தொடர்பில் குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும்   அவர் கூறினார்.

இந்தக் கோரிக்கைகளுக்கு அமைய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர், மகாவலி மற்றும் சுற்றாடல் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் போன்றோருக்கு நடவடிக்கைக்காக ஜனாதிபதியின் செயலாளரினால்  பணிக்கப்பட்ட கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளையின் கோரிக்கைகளை  ஏற்று நடைமுறைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அது சம்மந்தமாக தாங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை உடன்  மகாண சபை உறுப்பினருக்கு அறியப்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X