2025 மே 20, செவ்வாய்க்கிழமை

உதயசிறியின் சார்பில் மேன்முறையீட்டு மனுத் தாக்கல்

Sudharshini   / 2015 மார்ச் 14 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா, எம்.எம்.எம்.நூர்தீன்

சிகிரியா சுவரில் எழுத்திய குற்றத்துக்காக சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்ற மட்டக்களப்பைச் சேர்ந்த உதயசிறியின் சார்பில் மேன்முறையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிகிரியா சுவரொன்றில் தனது பெயரை எழுதியமைக்காக இரண்டு வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலையில் சிறைவாசம் அனுபவித்துவருகின்றார்.

அவரின் விடுதலை தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
தம்புள்ளை மேல் நீதிமன்றத்திலேயே மேன்முறையீட்டு மனு, நேற்று வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  

கடந்த 14.02.2015 அன்று சிகிரியாவுக்கு சுற்றுலாச் சென்றிருந்த மட்டக்களப்பு, சித்தாண்டி, விநாயகர்புரத்தினைச் சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறி (27) என்ற யுவதி, அங்குள்ள சுவர் ஒன்றில் தனது பெயரை எழுதினர் என்ற குற்றச்சாட்டில் அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட அவர், 02.03.2015 அன்று தம்புள்ளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டவேளை தொல்பொருட்களைச் சேதப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில், அவருக்கு இரண்டு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X