Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2015 மார்ச் 20 , மு.ப. 08:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித், ஏ.எச்.ஏ.ஹுஸைன்
சிகிரியாவிலுள்ள பளிங்குச் சுவரில் தனது பெயரை எழுதிய குற்றச்சாட்டில்இரண்டு வருட சிறைத்தண்டனை அனுபவித்து வரும் மட்டக்களப்பு, சித்தாண்டியைச் சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறிக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்யுமாறு வழியுறுத்தி, சித்தாண்டி பொது அமைப்புக்கள் ஒன்றியம், சித்தாண்டி வாழ் பொதுமக்கள் இணைந்து இன்று வெள்ளிக்கிழமை (20) கவனயீர்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்டனர்.
இதன்போது, மேற்படி யுவதியின் விடுதலை வலியுறுத்தும் மகஜர் ஒன்று ஜனாதிபதியிடம் கையளிப்பதற்காக ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது.
இவ்வாறு கையளிக்கப்பட்;ட மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மட்டக்களப்பு, சித்தாண்டி – 01 கிராமத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. சின்னத்தம்பி உதயசிறி (வயது – 27) யுவதி 14.02.2015 அன்று தான் வேலைசெய்யும் நிறுவனத்தின் நண்பர்களினால் ஒழுங்குசெய்யப்பட்ட சுற்றுலா ஒன்றுக்காக சென்றிருந்தார்.
சென்ற சுற்றுலாவின் ஓர் அங்கமாக தம்புள்ள பகுதியில் இருக்கின்ற சிகிரியா ஓவியத்தை பார்வையிட சென்ற வேளை அவர் அங்குள்ள பளிங்கு சுவரில் தனது பெயரினை எழுதினார் என்ற அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டு இவ்வழக்கானது 02.03.2015 அன்று தம்புள்ள நீதிமன்றத்தினால் 2 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டு குறித்த யுவதி அநுராதபுர சிறைச்சாலையில் சிறையிடப்பட்டார்.
இது இவரது அறியாமையின் காரணமாக நிகழ்ந்த ஒரு காரணமாக நாங்கள் கருதுகின்றோம், இவர் சிறு வயதிலே தந்தயை இழந்ததோடு இவரது தாயார் அவர் அரிசி குற்றி வித்தல், இடியப்பம், பிட்டு போன்றவற்றை தயாரித்து விற்று தனது ஐந்து பிள்ளைகளையும் பராமரித்து வந்தார். தனது குடும்ப கஸ்டநிலை காரணமாக தனியார் தொழிற்சாலை ஒன்றில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
எனவே இவ் வதியின் எதிர்கால நன்மை கருதி தங்களின் கருணையினை இந்த ஏழை யுவதிமீது காட்டுமாறு தங்களை மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்வதோடு மட்டக்களப்பு வாழ் மக்கள் என்றென்றும் நன்றியுடையவர்களாக இருப்பார்கள் என்பதை தங்களை மேலான பவனத்திற்கு அறியத்தருகின்றோம்' என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .