Suganthini Ratnam / 2015 மார்ச் 29 , மு.ப. 08:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, தாழங்குடா பிரதேசத்தில் திருமண வீடொன்றில் வழங்கப்பட்ட உணவு மாதிரியை கொழும்பிலுள்ள மருத்துவ ஆய்வு நிலையத்துக்கு அனுப்பிவைத்துள்ளதாக மண்முனைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி வி.பவித்ரா தெரிவித்தார்.
மேற்படி திருமண வீட்டில் கடந்த புதன்கிழமை வழங்கப்பட்ட உணவை உட்கொண்டவர்களில் சிலர் காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் கடந்த வியாழக்கிழமையிலிருந்து அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் சிலர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டிருந்தனர்.
சுமார் 80 பேர் சுகவீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
மண்முனைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தை சேர்ந்த பொதுச் சுகாதார பரிசோதகர்களான கே.சத்தியானந்தன், ஏ.இளங்கோபன், வி.கணேசன் ஆகிய மூவரும் மேற்படி திருமண வீட்டுக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர். இங்கு உணவு சமைத்த சமையற்காரர்களிடமும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் தாம் விசாரணை மேற்கொண்டுவருவதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago