2025 ஜூலை 19, சனிக்கிழமை

விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 07 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்,எம்.எஸ்.எம்.நூர்தீன்,ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, கிரான்குளம் பகுதியில்  இன்று செவ்வாய்;க்கிழமை காலை இடம்பெற்றுள்ள விபத்தில் பாடசாலை மாணவன்  ஒருவன்  உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கிரான்குளத்தை சேர்ந்த குமணன் மதிஷ்டன் (வயது 7) என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இவர் கிரான்குளம் சரஸ்வதி வித்தியாலயத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்றுவருகின்றார்.

தனது வீட்டிலிருந்து  பாடசலைக்கு  புறப்பட்டு வந்துகொண்டிருந்த இந்த மாணவன், வீதியை கடந்துகொண்டிருந்தபோது  அவ்வீதி வழியாக வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாகவும் பொலிஸார் கூறினர்.

சடலம் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X