2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சிறுபான்மைச் சமூகம் பசி கொண்ட சமூகம்: அமீர் அலி

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 16 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

சிறுபான்மைச் சமூகம் பசி கொண்ட சமூகமாகவுள்ளது.  தேவையுள்ள சமூகமாக இருந்துகொண்டு இன்னும் இன்னும் இறங்கிச்செல்லும் அரசியலுக்கு செல்ல முஸ்லிம் சமூகம் தயாராக இல்லை என்று சமுர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சர் எம்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு, பட்டிருப்பு பகுதியில்; கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம்  நேற்று புதன்கிழமை ஆரம்பித்துவைக்கப்பட்டது. இந்;த நிலையில், பட்டிருப்பு சித்திவிநாயகர் கோவில் வளாகத்தில்  நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'சமூகம் சார்ந்த அரசியலை நாங்கள் பேசும்பொழுது அரசாங்கத்தில் அமைச்சராக இருக்கவேண்டுமா அல்லது இல்லையா என்பது அல்ல பிரச்சினை.

தான் சார்ந்த சமூகத்துக்கு எங்கிருந்தாலும் நன்மை செய்யமுடியுமா என்று சிந்திக்கின்ற அரசியல் களம் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் உருவாகும் நிலைமை தென்படுகின்றது. அதன் முதல்;படியாக  கிழக்கு மாகாணசபையில் அமைச்சுப் பதவிகளை பெற்று  பணியை ஆரம்பித்துள்ளார்கள். ஆனால், கிழக்கு மாகாணசபையிலுள்ள அமைச்சுகள் சரியாக செயற்படுகின்றதா என்ற கவலையுள்ளது.

ஆட்சியாளர்கள் எப்போதும் மற்றையவர்களை தயார்ப்படுத்துகின்ற, வழிநடத்துகின்ற வேலைத்திட்டங்களில்  கவனம் செலுத்தவேண்டும். ஆனால், அவர்கள்  மற்றையவர்கள் வழிநடத்தும் அரசியல் தலைவர்களாக இருப்பார்களேயானால்,  அவர்களால் சிறந்த நிர்வாகிகளாக இருக்கமுடியாது.

இந்த அரசாங்கம் பேதங்களுக்கு அப்பாலிருந்து செயற்படுகின்ற பார்வையுள்ளது. அவற்றில் ஏதாவது சிறுபான்மை சமூகத்தை கவருகின்ற, நம்பிக்கை வைக்கின்ற வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படும்போது அந்த அரசாங்கத்துக்கு நன்றி கூறுகின்ற மனப்பக்குவத்தை  நாங்கள் வளர்க்கவேண்டும். இது மனிதநேயத்துடன் செய்யப்படுகின்ற விடயம்.

எல்லாவற்றையும் நாங்கள் குறையோடு பார்க்காமல் சமூகத்துக்காக  செய்யப்படுகின்ற காரியங்களுக்கு நாங்கள் நன்றியோடு பார்க்கும் நிலை இருக்கவேண்டும்.

கடந்த காலத்தில் வடக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை பாதுகாப்பு தரப்பினர் விடாமல் வைத்திருந்த நிலையில், இந்த நல்லாட்சிக்கான அரசாங்கம் வந்தவேளையில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் அனைவரும் ஒன்றிணைந்து இராணுவத்தினரின்; பிடியிலுள்ள காணிகளை பகுதிபகுதியாக விடுவித்துவருகின்றார்கள் என்றால், அதற்கு சிறுபான்மையினர்  நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளனர். அதற்கு நானும் நன்றி கூறுகின்றேன். அரசியலில் ஏற்ற, இறக்கம் வரும். ஆனால், இந்த ஏற்ற, இறக்கம் நிரந்தரமான விடயம் அல்ல.

எதிர்காலத்தில் அமைச்சுகளை அலங்கரிக்கும் உறுப்பினர்களாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களை நான் பார்க்கிறேன். இந்த மாற்றம் எதிர்வரும் தேர்தலுக்கு பின்னர் வரக்கூடிய சந்தர்ப்பமும் உள்ளது.

முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தமிழ் தலைவர்களிடத்திலேயே அரசியலை படித்தார்கள். அவரசப்படும் சமூகத்துக்கு அவசரமான பணியை செய்யும் வகையில் அவர்கள் எங்களை மாற்றினார்கள்.

எதிர்வரும் காலம் இந்த அரசாங்கதில் எங்களது எதிர்பார்ப்புகள், மக்களுடைய எதிர்பார்ப்புகள் நிச்சயமாக நிறைவேறும் என்ற நம்பிக்கையுள்ளது. அதற்காக பிரதேச அரசியல்வாதிகளாகிய  நாம் பேதங்களை மறந்து ஒன்றுபட்டு செயற்படுவோம்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X