2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'சேவைகளை செய்வதற்கு ஆளும் கட்சியில் இருக்க வேண்டியதில்லை'

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 16 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மக்களுக்கான  சேவைகளை செய்வதற்காக  ஆளும் கட்சியில்  இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. எதிர்க்கட்சியிலும் இருந்து  சேவைகளை செய்யமுடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினரின் உரிமையை  சரிவர பயன்படுத்தினால், பல சேவைகளை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு, பெரியகல்லாறு மாவட்ட வைத்தியசாலையில் சுமார் ஐந்து இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா நேற்று வியாழக்கிழமை (16) திறந்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'1996ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக நான் தெரிவுசெய்யப்பட்டது முதல்  இதுவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல சேவைகளை ஆற்றியுள்ளேன். அனைத்துச்  சேவைகளையும்;  எதிர்க்கட்சியிலிருந்தே நான் செய்துவந்தேன்.

எமது உரிமைகளை நாங்கள் கோரி வந்த அதேவேளை, எனக்குள்ள நாடாளுமன்ற உரிமையை பயன்படுத்தி மக்களுக்கு சேவையாற்றி வந்துள்ளேன்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X