2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஆயுர்வேத சுதேச வைத்தியர் சங்கம்

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 17 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் ஆயுர்வேத சுதேச வைத்தியர்களின் சங்கமொன்று நேற்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.

ஆயுர்வேத பாதுகாப்புச் சபையின் புதிய திட்டத்தின் கீழ் ஆயுர்வேத திணைக்களத்தின் சுற்றுநிரூபத்துக்கு அமைய  காத்தான்குடி பிரதேச செயலாளரின் ஆலோசணையுடன் இந்த சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.  

காத்தான்குடி பிரதேச செயலக விதாத மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில்,  காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆயுர்வேத சுதேச வைத்தியர்கள் கலந்துகொண்டனர்.

இந்தச் சங்கத்தின் தலைவராக ஏ.எச்.எம்.இப்றாலெவ்வை, செயலாளராக என்.எம்.ஹனிபா, பொருளாளராக ஏ.எஸ்.எம்.அப்துல்லாஹ், உப தலைவராக எம்.எஸ்.பக்கீர் முகைதீன், உப செயலாளராக எம்.எம்.றமீஸ் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர். நிர்வாக உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X